மாற்றுப் பணி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Sep 22, 2022, 11:03 AM IST
Highlights

மாற்றுப் பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வி, திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாற்று பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க:Viral : களக்காடு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது!!

மொத்தமாக முதுகலை ஆசிரியர்கள் 111 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 32, இடைநிலை ஆசிரியர்கள் 39 என 182 ஆசிரியர்கள் மாற்று பணிக்கு சென்றுள்ளனர். எனவே இவர்களுக்கு பதிலாக தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் ரூ.7,500 , பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்கள் ரூ.12,000 என்ற தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:Watch : குன்றத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் உயிரிழப்பு!!

click me!