CBSE, ICSE என எந்த பள்ளியாக இருந்தாலும் இனி தமிழ் கட்டாயம்.. தமிழக அரசின் இந்த சட்டம் பற்றி தெரியுமா?

By Ramya sFirst Published May 25, 2023, 4:10 PM IST
Highlights

தமிழ்நாட்டில் எந்த ஒரு வகையான பள்ளியில் சேர்த்தாலும் அங்கு மாணவர்கள் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கம் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடம் கற்பிக்கப்படும் .

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளும் இதில் அடங்கும். எனவே இனி 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இனி கட்டாயம் தமிழ் பாடத்தை கற்க வேண்டும். இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு வகையான பள்ளியில் சேர்த்தாலும் அங்கு மாணவர்கள் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கம் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடம் கற்பிக்கப்படும் .

பிற மாநில அல்லது பிற நாடுகளின் மொழியை மாணவர்கள் கற்கும் அதே வேளையில் தமிழ் மொழியை கற்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் தேவையான தமிழ் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு முறையாக தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி.. நாடு திரும்பிய பிரதமர் மோடி அதிரடி சரவெடி பேச்சு..!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 3 வகையான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு ப்பளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டும் மாநில பாடத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றன. எனினும் மாநில பாடத்திட்டத்திற்கு உட்படாமல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பல வகையான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகிறது.

இந்த சூழலில், 2006-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி மெட்ரிகுலேஷன் மாணவர்கள் கட்டாயம் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். அதே போல் மாநில பாடத்திட்டம் இல்லாமல் வேறு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. இந்த சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிபிஎஸ்இ போன்ற பிற பள்ளிகளில் 2015-2016 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 2016-2017 கல்வியாண்டில் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும் என கடந்த 2022-2023 கல்வியாண்ட்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது வரும் 2023-2024-ம் கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2024-2025 கல்வியாண்டில் 10-ம் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய தமிழ் பாட சட்டத்தின் கீழ் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் உள்ள தமிழ் புத்தகமே சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாக இருந்தாலும், அது பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் கணக்கிடப்படாது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாய தேர்வு எழுதியதற்கு தனியாக சான்றிதழ் வழங்கப்படும். தமிழ்நாட்டில் நடக்கும் போட்டி தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்ற நிலை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு மாணவரும் தமிழ் மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்த உத்தரவு வாபஸ்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

click me!