மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்படுவதாகவும், மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புயல் வெள்ள பாதிப்பு- விடுமுறை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்களில் 70 செ,மீட்டருக்கு மேல் மழையானது பதிவானது. கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான மழை என கூறப்படுகிறது. இந்த மழை பாதிப்பு காரணமாக தமிழக அரசு கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு இன்னும் சரி செய்யப்படாத காரணத்தால் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
undefined
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்