Grama Sabha : கிராம சபை கூட்டம் எப்போது.,? எது தொடர்பாக விவாதிக்க வேண்டும்- வெளியான தமிழக அரசு அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Aug 8, 2024, 2:08 PM IST

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது தூய்மையான குடிநீர், இணையவழி வரி, கட்டிடங்களுக்கு இணையவழி அனுமதி தொடர்பாக விவாதிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


கிராம சபா கூட்டத்திற்கு அழைப்பு

தமிழகத்தில் கிராம சபை கூட்டமானது குடியரசு நாள் (26, ஜனவரி), உலக நீர் நாள் (மார்ச் 22) தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது நடைபெறும். தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டமானது கூட்டப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கூட்டுவது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சுதந்திர தினத்தன்று காலை 11மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவாதிக்க வேண்டிய பொருள் என்ன.?

கிராம சபை கூட்டத்தில், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கும் படி கூறப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்,  சுயசான்று கட்டிட அனுமதி பெறுவதற்கான செயல்முறைகள், 

தமிழக அரசுக்கு அறிக்கை

 அரசு பொது கட்டடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாக கிராம சபை கூட்டத்தில்  ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும் படி அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Student : பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களா நீங்கள்.! இந்த போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்- அரசு எச்சரிக்கை

click me!