தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி

Published : Dec 05, 2025, 04:18 PM IST
Annamalai

சுருக்கம்

திருப்பரங்குன்றத்தில் தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது. நீதிமன்ற தீர்ப்பை மறைத்து அமைச்சர் ரகுபதி பொய் சொல்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''டிசம்பர் 1ம் தேதி நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் பல விஷயங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. இந்த மலையை பொறுத்தவரை சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மலை ஏறும் படிக்கட்டு இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது.

பொய் சொல்லும் அமைச்சர் ரகுபதி

மலையின் மற்ற பகுதிகள், தீபத்தூண் ஆகியவையும் கோயிலுக்கு, இந்துக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே சில பொய்களை கூறியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பை கொடுத்துள்ளதாக ரகுபதி கூறியுள்ளார். இந்த பிரச்சனை 2014ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. உச்சிபிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்ற வேண்டும் என அன்றே நீதிமன்றம் சொன்னதாக ரகுபதி கூறியிருக்கிறார். அதாவது 2014 மற்றும் 2017ம் ஆண்டு தீர்ப்பு மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான உத்தரவாகும்.

இப்போதைய தீர்ப்பில் சாரம்சம் இதுதான்

ஆனால் இப்போது மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் கோரவில்லை. தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குத் தான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் கொஞ்சம் கீழே இருக்ககூடிய தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்பது தான் நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவின் சாரம்சம் ஆகும். ஆனால் அமைச்சர் ரகுபதி இதை திரித்து 2014 மற்றும் 2017 தீர்ப்புகளை மேற்கொள் காட்டி பேசுகின்றனர்.

பழைய தீர்ப்பை வைத்து குழப்பக் கூடாது

இதேபோல் 1996ம் ஆண்டின் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக ரகுபதி சொல்லி இருக்கிறார். 1996 தீர்ப்பு என்பது அந்த ஆண்டுக்கான தீர்ப்பு. ''இந்த ஆண்டு உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுங்கள். அடுத்த ஆண்டு தேவஸ்தானமோ இல்லை வேறு யாரோ வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்றால் தர்காவில் இருந்து 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றுங்கள்'' என்று தான் 1996 தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகவே 1996, 2014 மற்றும் 2017 தீர்ப்புகள் வெவ்வேறு விஷயங்கள். அதற்கும் இப்போது கொடுத்து இருக்கும் தீர்ப்புக்கும் முடிச்சு போடக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!
வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!