
Annamalai Speech at Madurai Murugan Maanaadu : மதுரை பாண்டிகோவில் அருகில் அம்மா திடலில் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை முருகன் மாநாட்டை அரசியல் கள மாநாடாக மாற்றி தனக்கே உரிய ஸ்டைலில் பேசியுள்ளார். அதோடு ஏராளமான புள்ளி விவர கணக்குகளையும் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அண்ணாமலை கூறியிருப்பதாவது: இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும். என்னுடைய பிள்ளைகள் பள்ளி செல்லும் போது திருநீறு வைத்து செல்ல வேண்டும். கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
சிந்தூர் ஆபரேசன் திட்டத்தில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது இங்கு சிலருக்கு பயம் வந்துவிட்டது. இந்து மதம் 120 கோடி, கிருஸ்துவ மதம் 220 கோடி, 53 நாடுகளில் இஸ்லாமியர்கள் 200 கோடி உள்ளனர். உலகம் முழுவதும் எந்த மதத்தையும் சாராதவர்க்ள் என்று 190 கோடி மக்கள் இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் யாரும் பாதுகாப்பு இல்லாமல் இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகனின் ஆறுபடை கோவிலில் தரிசனம் செய்கின்றனர். ஆனால் 6 படை முருகனின் கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது.
தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கீழ் 44 ஆயிரம் கோயில் உள்ளது, பழமையான கோயில்கள் 344 கோயில்கள் உள்ளன. இங்கு வரும் போது அனைவரும் முருக பக்தர்களாக வந்துள்ளோம். உலகம் முழுவதும் மக்கள் தொகை கிறிஸ்துவ மதத்தில் 12 கோடி உயர்ந்துள்ளது. இஸ்லாமியர்கள் 35 கோடி உயர்ந்துள்ளது.
இப்படியே போனால் உலகில் இசுலாமியர் மக்கள் தொகை அதிகமாகிவிடும். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இந்துக்கள் மட்டுமே ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மதம் மாறுகின்றனர். ஆனால், மற்ற மதத்தினர் யாரும் அப்படி மதம் மாறுவதில்லை. இனி வரும் காலங்களில் ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது. அப்படி மதம் மாறிய இந்துக்கள் உடனடியாக இந்து மததிற்கு மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கந்த சஷ்டி கவசதில் ஆன்மீகமும், அறிவியலும் உள்ளது.
முருகனை தமிழ் கடவுள் என தமிழகத்தில் மட்டும் தான் தெரியும் என கூறுகின்றனர், வட மாநிலத்தில் தெரியாது என சொல்கின்றனர். கந்த புராணத்தை முழுமையாக ஹேம்பிரிஜ் பல்கலை கழகம் ஆங்கிலேயர்கள் தான் கொண்டு வந்தனர். நாம் இரண்டு நாடுகளில் இருந்தால் மட்டுமே இருந்தாலும் நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நெற்றியில் திருநீரை அழித்தவர்கள் தேர்தலின் போது ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள்.
அரசியல் பேச கூடாது. ஆனாலும் பேசுகிறேன் , திருப்பதி கோவிலுக்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி உள்ளது. இப்படி மாநாட்டை நடத்தி இந்துக்களை ஒன்றிணைத்த இந்து முன்னணி மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நன்றி என்று ஆவேசமாக பேசியுள்ளார்.