Annamalai : கள்ளச்சாரயத்தால் 60 பேர் பலி!! இனியும் முதலமைச்சராக ஸ்டாலின் தொடர்வதா.?களத்தில் இறங்கும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Jun 20, 2024, 11:36 AM IST

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும்,  முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


விஷச்சாராய மரணம்

கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 37பேர் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், விஷச்சாராயத்தை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

Kallakurichi : விஷச்சாராயத்தால் நொடிக்கு நொடி உயரும் பலி.. 10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

40ஆண்டுகள் பின்னோக்கி சென்ற தமிழகம்

 கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.  நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினை அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், 

முதலமைச்சர் பதவி விலகனும்

முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக  சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். 

Kallakurichi : சிகிச்சைக்கு வராமல் வீட்டிலேயே துடி துடித்து பலியாகும் உயிர்கள்.!வீடு,வீடாக மருத்துவ குழு சோதனை

click me!