கோவையை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி சமந்தா மீனாட்சி. அதே பகுதியில் உள்ள அன்னை மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் சமந்தா சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற உலக யோகா போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய சிறுமி சமந்தாவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
கோவையை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி சமந்தா மீனாட்சி. அதே பகுதியில் உள்ள அன்னை மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் சமந்தா சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இந்நிலையில் , டெல்லி காசியாபாத் நகரில் அண்மையில் யு.ஒய்.எஸ்.எஃப். வேர்ல்டு கப் யோகா எனும் யோகா போட்டிகள் நடைபெற்றன.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவு தனி பிரிவில் கலந்து கொண்ட சமந்தா மீனாட்சி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இந்நிலையில், கோவை விமான நிலையம் திரும்பிய சிறுமிக்கு அவரது பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி உட்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையும் விமான நிலையம் வந்தததால் சிறுமியின் சாதனையை அறிந்த அவர், சமந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதே போல சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.