வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைப்பதா? கருணாநிதி குடும்பத்திற்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்

By Velmurugan s  |  First Published Jan 18, 2024, 5:43 PM IST

வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் குடும்பத்தினர் மீது அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் காளை

Tap to resize

Latest Videos

undefined

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. 

அமராவதி ஆற்றில் மூழ்கிய சிறுவன், காப்பாற்ற சென்றவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் பலி

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!