அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 5 மாதங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு. குற்றவாளி கைது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
Anna University student Paliyal case verdict today : அண்ணா பல்கலைகழக மாணவிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கல் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த 5 மாதங்களாக வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த 5 மாத காலத்தில் மாணவி புகார் முதல் தீர்ப்பு வரை என்ன நடைபெற்றது என்பதை தற்போது பார்க்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு- நடந்தது என்ன.?
டிசம்பர் 23 - அண்ணா பல்கலைகழக வளாகத்தில் ஆண் நண்பரோடு பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை
டிசம்பர் 24- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
டிசம்பர் 24- புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர்
டிசம்பர் 24- மாணவி வாக்குமூலமாக கொடுத்த எப்ஐஆர் வெளியானது- அரசியல் கட்சிகள் கண்டனம், போராட்டம்
டிசம்பர் 28 ம் தேதி - பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி மாதம் 5 ஆம் தேதி - ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு
மாணவி பாலியல் கொடுமை நடந்த அன்று குற்றவாளி ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாக எப்ஐஆரில் தகவல்
'யார் அந்த சார்?’ என்னும் கேள்வி- திமுக அரசிற்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம்
பிப்ரவரி 24 ம் தேதி- சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மார்ச் 7 ம் தேதி - இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
ஏப்ரல் 8 ம் தேதி - தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனு
ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த தள்ளுபடி செய்து உத்தரவு
பாலியல் வன்கொடுமை, ஆதராங்களை அழித்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது என 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.
சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
மே 20ஆம் தேதி- வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்தது. இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர்
மே 28ஆம் தேதி - அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தீர்ப்பு