
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால கட்டத்தில் எந்தவித சலுகையும் குற்றவாளிக்கு வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இடை இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஞானசேகரனுக்கு பின்னனியில் உள்ள நபர்கள் யார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியாக எழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதனை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியதாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியதாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.