
47 தொழிற்சங்கங்கள் நடத்தும் நாளை அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பார்கள் என்று சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறியதையடுத்து நாளை முதல் 47 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
ஆனால் தமிழகம் முழுவதும் இன்றே போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சருடன் சற்று முன் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தததையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அமைச்சர் ஒரு அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு வாபஸ் பெற சொன்னால் எப்படி முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டத்தை தூண்டுவதாக தெரிவித்தனர்.
நாளை நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்க உள்ளதாக சிஐடியு தொழிற்சங்க செயலாளர் சௌந்தரராஜன் தெரிவித்தனர்.
பயிற்சி ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளத என்றும் ஆனாலும் எங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.