
கும்பகோணம்
கும்பகோணத்தில் மாசி அமாவசையன்று மழை வேண்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 27 ஆயிரம் வடைகளால் அலங்காரம் செய்யபட்டது.
கும்பகோணம் பாலக்கரை காமராசு நகருக்கு அருகில் இருக்கிறது ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில்.
தற்போதைய சூழ்நிலையில் எல்லாக் கோவிலிலும் இருக்கும் அடியார்கள் வேண்டிக் கொள்வது இந்த கோவிலிலும் ஒரு கோரிக்கையை ஆஞ்சநேயரிடம் வேண்டினர்.
அது என்னவென்றால், “மழை பெய்து நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டும்” என்பதே.
அதற்கு அவர்கள், ஆஞ்சிநேயரை மனநிறைவுபடுத்த, மாசி மாத அமாவாசையான நேற்று 27 ஆயிரம் வடைகளை வடைமாலையாக அலங்காரம் செய்து ஆஞ்சநேயருக்கு சூடினர்.
மேலும், ராமநாம ஜபம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியவை செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றன. இதனை திரளான அடியார்கள் தரிசனம் கண்டனர்.
இந்த 27 ஆயிரம் வடைகளை செய்ய கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த வடை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
அமாவாசை தினத்தில் உரிக்காத முழுதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் நினைத்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம்.
இதனையும் நேற்று கூடிய திரளான அடியார்கள் செய்தனர். மட்டைத் தேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து பூசை செய்து தங்களது தனிப்பட்ட வேண்டுதலையும், கூடவே விவசாயத்திற்கு மழை, உலக அமைதி போன்றவற்றிற்கும் வேண்டிக் கொண்டனர்.