
Pawan Kalyan Speech at Madurai Murugan Maanaadu : மதுரை பாண்டிகோவில் அருகில் அம்மா திடலில் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருப்பது: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாதனை செய்ய போகும் அவர்களுக்கு வணக்கம். என்னை மதுரைக்கு வர வைத்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கும் அதிகம் முதல் வீடும், 6 வது வீடும் மதுரையில் உள்ளது. மதுரையின் முதல் சங்கத்திற்கு தலைமை ஏற்றவர் முருகனின் தந்தை சிவன்.
இந்த தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்கிறேன், ஒரு காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலில் தீபம் ஏற்றப்படவில்லை. நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை, நமது கலாசாரம் ஆழமானது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆழமாக இருந்தது. முருகனின் வடிவத்தில் நமது அறம் வளரும், தீயவர்களை வதம் செய்வது அறம், உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன் பெருமான், அநீதியை அழித்ததால் தான் முருகன் புரட்சி தலைவர். ஒரு கட்சி தலைவர் கேட்கிறார், முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள், ஏன் வேறு மாநிலங்களில் நடத்தவில்லை.
சென்னை மயிலாப்பூரில் நான் பள்ளி சொல்லும் போது நெற்றியில் திருநீரை பூசி சென்று செல்வேன், பின்னர் நான் திருநீறு பூசியதற்கு கேள்வி கேட்கின்றனர். அரபு நாடுகளில் இருந்து வந்தவர்களின் மதங்களை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்ல. சீண்டி பார்க்காதீர்கள் , சாது மிரண்டால் காடு கொள்ளாது. வட இந்தியாவில் முருகன் கார்த்திகேயனாக, ஆந்திரா கர்நாடகாவில் சுப்பிரமணியனாகவும் , தமிழகத்தில் முருகனாக உள்ளார் , அதனால் தான் இந்த மாநாடு மதுரையில் நடைபெறுகின்றது
சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர், நாம் நிறத்தில் வாயிலாக பார்க்க வில்லை அறத்தின் வாயிலாக பார்க்கின்றோம். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கின்றனர், அவர்கள் கிண்டல் செய்தால் ஜனநாயகம் என்று சொல்கின்றனர். மற்றவர்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க அவர்கள் யார் , இவர்கள் மற்ற மதத்தை பற்றி பேச முடியுமா,
பொறுமை என்பது கோளை தனம் இல்லை, நாம் அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தால் அந்த கூட்டம் காணாமல் போய்விடும். முருகனை பற்றி பேசினால் நாம் அமைதியாக இருக்கலாமா , முருகனை நாம் காப்பாற்ற வேண்டாம், நம் காக்கும் முருகனுக்கு ஒன்று என்றால் நமது இதயம் துடிக்க வேண்டாமா. இது கலியுகம் முருகன் நேரில் வர மாட்டார்.
அரசமைப்பு இல்லாத போது மாலிக் கபூர் ஆட்டம் போட்டான், ஆனால் அரசியலமைப்பு உள்ள போது ஒரு கூட்டம் ஆட்டம் போடுகின்றது. நம் நாட்டில் இந்து கடவுளை மட்டும் நம்ப மாட்டார்கள். இந்த கூட்டத்திற்கு அரசியலமைப்பு பேச்சு சுதந்திரம் கொடுத்து உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நான் கிறிஸ்துவம், இஸ்லாத்தை மதிக்கின்றேன்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசி வந்த பவன் கல்யாண் தற்போது தெலுங்கில் பேசி வருகின்றார். மகாகவி பாரதி சொல்வது போல் அச்சமில்லை அச்சமில்லை என்று கூறினார், நாமும் அதே போல் அச்சமில்லாமல் செயல்பட வேண்டும். முருகன் தான் எனக்கு தைரியம் கொடுத்தார் , அதனால் தான் நான் இன்று இந்த இடத்தில் உள்ளேன்.
முருகன் காட்டும் வழியில் சென்றால் வெற்றி கிடைக்கும். இந்த பாதை மிக மிக கடுமையானது, ஆனாலும் முருகனை நினைத்து இந்த பாதையை நாம் கடக்க வேண்டும். நமது பாதையில் கொடுமையானர்கள் உள்ளனர் நாம் வீர வேல் வெற்றி வேல் என்று சொன்னால் அவர்கள் ஓடிவிடுவார்கள். இந்துகள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
எலி கூட்டம் எவ்வளவு இருந்தாலும் ஒரு நல்ல பாம்பு சீண்டினால் எலிகள் ஓடிவிடும், அதே போல் சிவனின் கழுத்தில் உள்ள நாக பாம்பு போல் நாம் சீண்ட வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது, தர்மத்தின் வழியில் நாம் சென்றால் நமக்கு வெற்றி தான் என்று பேசியுள்ளார். இந்த மாநாட்டின் போது 6 விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.