தலைமைச் செயலகத்திற்கு சென்ற அன்புமணி..! முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு- காரணம் என்ன.?

Published : Oct 09, 2023, 12:12 PM IST
தலைமைச் செயலகத்திற்கு சென்ற அன்புமணி..! முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு- காரணம் என்ன.?

சுருக்கம்

வன்னியர்களுக்கு  10.5  உள் ஒதுக்கீடு திமுக அரசு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அன்புமணி, தமிழக அரசு இன்னும்  காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்   

ஸ்டாலினோடு அன்புமணி சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் 10.5 சதவிகித வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் உள் ஒதுக்கீட்டை தரவுகளை ஆய்வு செய்து வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டதாக தெரிவித்தவர், ஆனால்  திமுக அரசு காலம் தாழ்த்திவிட்டதாகவும், தரவுகளை பெற இத்தனை நாட்கள் ஆகாது 15 நாட்களில் முடிய வேண்டிய வேலையை காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார்.

 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு

திமுக அரசு வன்னியர் உள் ஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவார்களா என்ற  சந்தேகம் எழுத்துள்ளதாகவும், கடந்த முப்பது ஆண்டுகளாக வட மாவட்டங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் பாதிக்கபட்டிருப்பதாகவும், திமுக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும், இந்தியாவில் மற்ற மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது, இதைப்போல் தமிழக  அரசும்  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சி..! திடீரென பாஜகவிற்கு ஜம்ப் அடித்ததால் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!