அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அடுத்த விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று வந்தன.
வழக்கம் போல் இன்றும் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்று காலை 10 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் அப்பகுதியில் பல கி.மீ. தூரத்திற்கு எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது.
undefined
ஆந்திராவில் அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் பலி
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியல் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை; தலையில் தட்டி இழுத்துச் சென்ற போலீசார்
மேலும் விபத்து நிகழ்ந்த இதே ஆலையில் கடந்த ஆண்டும் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.