அரியலூர் மாவட்டத்தில் தவறுதலாக தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை மீண்டும் உரிமையாளரிடமே திருப்பி அனுப்பிய மாற்றுத் திறனாளியின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கண்ணன் தோப்பு தெரு பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன். மாற்று திறனாளியான இவர் ஜெயங்கொண்டம் 4 ரோடு சந்திப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் பே மூலம் ரூபாய் 25000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் வெங்கடேசனிடம் தொலைபேசியில் பேசிய மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நபர் பணத்தை தவறுதலாக மாற்றி அனுப்பி வைத்து விட்டதாகவும், எங்கள் பணத்தை மீண்டும் எங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். உடனே வெங்கடேசன் வங்கி மேலாளரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோர் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தவறுதலாக பணம் அனுப்பியதாக கூறிய நம்பருக்கு தொடர்பு கொண்டு தவறுதலாக பணம் அனுப்பியதை உறுதி செய்து கொண்டனர்.
மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்படும் அண்ணாமலை; விரைவில் புதிய தலைவர் - எஸ்.வி.சேகர் பகீர் தகவல்
இதனையடுத்து வெங்கடேசன் கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவரின் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். மாற்று திறனாளியின் நேர்மையான செயல்பாட்டினை காவலர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.