கிராம சபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தடை, மதுவிலக்கு தீர்மானம்..! அன்புமணி கோரிக்கை

By Ajmal KhanFirst Published Aug 9, 2022, 11:29 AM IST
Highlights

சுதந்திர தினத்தின் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆகஸ்ட் 15- கிராம சபை கூட்டம்

கிராமசபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர தினமான 15.08.2022 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினமான 15.08.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விவாதித்தல், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பியாட் செஸ் போட்டி நிறைவு விழா..! தோனி பங்கேற்கவில்லை.. காரணம் என்ன தெரியுமா.?

மதுவிலக்கு தீர்மானம் கொண்டு வரவேண்டும்

இந்தநிலையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்! தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அரசு பேருந்துகள் தனியாருக்கு தாரைவார்ப்பா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்!  இரு சமூகக் கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்புகொண்டாலும் கூட,  ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும்  தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான்  செல்கிறது!  மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராமசபைக் கூட்டங்களில் பாமகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி...! என்ன, என்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் பட்டியல் வெளியீடு

 

click me!