நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வி.சுரேஷ் மீது கனிமவளக் கொள்ளையர்களால் ஏவி விடப்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடக்குமுறைகளின் மூலம் கனிமக் கொள்ளை சாம்ராஜ்யத்தை பாதுகாத்துக் கொள்ள முயலும் காட்பாதர்களின் அட்டகாசம் கண்டிக்கத்தக்கது.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் கூடுதலான கனிமக் கொள்ளை நடைபெற்றிருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் தடுத்து வருகிறது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் வாயிலாக கனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் நிலை உருவாகி விடுமோ? என்ற பதட்டம் காரணமாகவே கனிமக் கொள்ளையர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தாதுமணல் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. அது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக பி.யு.சி.எல் சுரேஷை நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) நியமித்தது. அதன்படி ஆய்வு செய்து சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தாதுமணல் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கனிமவளக் கொள்ளையின் காட்பாதர்கள் இத்தகைய காட்டுமிராண்டித் தனங்களை கட்டவிழ்த்து விடலாம். ஆனால், எதற்கும் முடிவு ஒன்று உண்டு. காட்பாதர்களின் காட்டாட்சிக்கு இன்னும் சில மாதங்களில் முடிவுரை எழுதப்படும். அப்போது கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும்.நெல்லை கனிமவளக் கொள்ளை குறித்த கருத்துக்
கேட்புக் கூட்டத்தில் பி.யூ.சி.எல் சுரேஷ் மீது தாக்குதல்:
காட்பாதர்களின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவுரை!
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வி.சுரேஷ் மீது கனிமவளக் கொள்ளையர்களால் ஏவி விடப்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடக்குமுறைகளின் மூலம் கனிமக் கொள்ளை சாம்ராஜ்யத்தை பாதுகாத்துக் கொள்ள முயலும் காட்பாதர்களின் அட்டகாசம் கண்டிக்கத்தக்கது.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் கூடுதலான கனிமக் கொள்ளை நடைபெற்றிருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் தடுத்து வருகிறது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் வாயிலாக கனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் நிலை உருவாகி விடுமோ? என்ற பதட்டம் காரணமாகவே கனிமக் கொள்ளையர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தாதுமணல் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. அது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக பி.யு.சி.எல் சுரேஷை நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) நியமித்தது. அதன்படி ஆய்வு செய்து சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தாதுமணல் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கனிமவளக் கொள்ளையின் காட்பாதர்கள் இத்தகைய காட்டுமிராண்டித் தனங்களை கட்டவிழ்த்து விடலாம். ஆனால், எதற்கும் முடிவு ஒன்று உண்டு. காட்பாதர்களின் காட்டாட்சிக்கு இன்னும் சில மாதங்களில் முடிவுரை எழுதப்படும். அப்போது கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும்.