தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐஆர்எஸ், மருத்துவர் மற்றும் கொண்ட ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு-ஆளுநர் மோதல்
டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. தற்போது நான்கு உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளதால். தேர்வு வாரியம் சர்யான முறையில் செயல்படவில்லையென குற்றச்சாட்டு எழுந்தது.
undefined
இதனையடுத்து இந்த இடத்தை நிரப்ப தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவும், உறுப்பினர்கள் செயலர்களின் பட்டியலை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால் ஆளுந்ர சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
5 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமனம்
இது தொடர்பான உச்சநீதிமற்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமனம் செய்ய 5 பேர் கொண்ட குழுவின் பெயரை தமிழக அரசுக்கு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தற்போது 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் பெயரை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐ ஆர் எஸ் அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, பொருளாதார வல்லுனர் உஷா சிவக்குமார் மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆறு ஆண்டுகள் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்