திருப்பூர் ரயில் நிலையம் அருகே முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடப்பதை பார்த்து விரைவு ரயிலை நிறுத்தியதுடன் ரயிலை பின்னோக்கி எடுத்து உயிரை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வழக்கம் போல் இன்று பகல் 3.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து கோவை நோக்கி செல்லும் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இந்த ரயில் திருப்பூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கள்ளம்பாலையம் அருகே திடீரென்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார்.
பண்ணாரி அருகே அதிகரிக்கும் காட்டு யானைகளின் மர்ம மரணம்; குட்டியுடன் சுற்றி திரிந்த நேர்ந்த சோகம்
அதை பார்த்து சுதாரித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அவசர கால பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்த முற்பட்டார். இருப்பினும் ரயில் அந்த முதியவரை கடந்து சென்று தான் நின்றது. இதில் அந்த முதியவர் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஓடி வந்து பார்த்த பார்த்த ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் ஊழியர்கள் முதியவரை வெளியில் மீட்க முயற்சி செய்தனர். ஆனால், முதியவரை மீட்க இயலவில்லை.
என் தப்பு தான்; என்ன மன்னிச்சிருங்க - கரூரில் பெண்கள், சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜோதிமணி
இதனைத் தொடர்ந்து ரயிலை பின்நோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். ரயிலை பார்த்ததும் உடனடியாக தண்டவாளத்தில் படுத்து கொண்டதால் அந்த முதியவரும் சிறிய காயங்களுடன் தப்பினார். தண்டவாளத்தை கடந்த முதியவருக்காக விரைவு ரயிரை உடனடியாக நிறுத்தி சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.