அருந்ததியர் பெண் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு..! 10 மணி நேரம் போராட்டத்தால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Dec 5, 2022, 11:20 AM IST
Highlights

102 வயது அருந்ததியர் பெண்ணின் உடலை அடக்க செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நடு ரோட்டில் உடலை வைத்து 10 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது.

அருந்ததியின பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே  ஒன்னக்கரசம்பாளையம் காலனியில் 102 வயதான ரங்கம்மாள் என்னும் மூதாட்டி நேற்று காலை இறந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த  காலணி மக்கள் இறந்தவரின் உடலை ஒண்ணக்கரசம்பாளையத்தில், காரேகவுண்டம்பாளையம் ரோட்டில் பொது மயானத்தை ஒட்டி புதைப்பதற்கு கொண்டு சென்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காலணி மக்கள் இறந்தவரின் உடலை சாலையின் நடுவில் வைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

முதலமைச்சர் செல்லும் பாதையில் வாகன தணிக்கை..! வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ் ஐ ?அதிரடியாக கைது செய்த போலீஸ்

அடக்கம் செய்ய எதிர்ப்பு

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த  கோவை மாவட்ட கூடுதல் எஸ் பி செல்வராஜ், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, தாசில்தார் தங்கராஜ், மற்றும் ஊராட்சி தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்கு புதைப்பதற்கு இடமில்லை. எனவே இங்குதான் புதைப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசி தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

10 மணி நேர போராட்டம்

இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலித்துகளுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் கொண்டு சென்று மூதாட்டியின் உடல் புதைக்கப்பட்டது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் 

ஒரே நேரத்தில் தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி.. கதவை பூட்டி காவலுக்கு நின்ற 2வது மனைவி.!

click me!