Aadi Month: ஆடி மாசம் அம்மன் தரிசனம் பண்ணப் போறீங்களா? சென்னை, மதுரை, திருச்சி பக்தர்களுக்கு TTDC-யின் சூப்பர் ஆஃபர்!

Published : Jul 10, 2026, 03:56 PM IST
tour

சுருக்கம்

Tour pakage: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் சிறப்பு "ஆடி அம்மன் சுற்றுலா" திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு தரிசனம் மற்றும் உணவுடன் கூடிய இந்த பயணங்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாத ஆன்மீக வழிபாடு, சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் தரிசனம் மேற்கொள்ள ஒரு நாள் சிறப்பு "ஆடி அம்மன் சுற்றுலா" திட்டம் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 17-07-2026 முதல் கீழ்கண்ட சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-1

பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள், இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன், புட்லூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன், திருமுல்லைவாயில் அருள்மிகு திருவுடையம்மன், அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில், செம்புலிவரம் செங்காளியம்மன் கோவிலுக்கு சுற்றுலா செல்ல ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-2

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள், அருள்மிகு முண்டகண்ணி அம்மன், அருள்மிகு கோலவிழியம்மன், தேனாம்பேட்டை அருள்மிகு ஆலயம்மன், தி.நகர் அருள்மிகு முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை அருள்மிகு பிடாரி இளங்காளி அம்மன், பெசண்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி, மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன், கீழ்பாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் கோவிலுக்கு சுற்றுலா செல்ல ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆடி அம்மன் சுற்றுலா - மதுரை

அருள்மிகு மீனாட்சி அம்மன், வண்டியூர் அருள்மிகு மாரியம்மன். மடப்புரம் அருள்மிகு காளியம்மன், விட்டனேரி வெட்டுடையார் காளியம்மன், தாயமங்கலம் அருள்மிகு முத்து மாரியம்மன், அருள்மிகு ராக்காயி அம்மன், அழகர் கோவிலுக்கு செல்ல ரூ.1400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆடி அம்மன் சுற்றுலா - திருச்சி

உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன், திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன், சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன், பொன்மலை அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன், திருச்சி அருள்மிகு உக்கிர காளியம்மன் கோவிலுக்கு சுற்றுலா செல்ல ரூ.1100 கட்டணம்.

ஆடி அம்மன் சுற்றுலா - தஞ்சாவூர்

அருள்மிகு வராகி அம்மன் (பெரிய கோவில்), அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன், திருக்கருகாவூர் அருள்மிகு கற்பரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் அருள்மிகு துர்கை அம்மன், வலங்கைமான் அருள்மிகு பாடைகட்டி மகா மாரியம்மன், திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை, அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி, மகாமக குளம் கும்பகோணம், தாராசுரம் அருள்மிகு ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்). கட்டணம் ரூ.1400 மேற்கண்ட ஆடி அம்மன் சுற்றுலா பயணத் திட்டங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் குடி நீர் வசதி, மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் முன்பதிவு செய்து இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய 108 அம்மன் கோவில்களில் 5 நாட்கள் சுற்றுலாவிற்கும் (கட்டணம் ரூ.11,250), ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு இராமேஸ்வரம் கோவில் 3 நாட்கள் சுற்றுலாவிற்கும் (கட்டணம் .6500) முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட சுற்றுலா தொகுப்புகளுக்கான முன்பதிவுகளை www.ttdconline.com என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25333 333, வாட்ஸ் அப் எண்.7550063121 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Karur CM Vijay Visuals | கரூரில் CM விஜய் ! அட்லஸ் கலை அரங்கம் மைதானத்தில் குவிந்த மக்கள்!
💥 கரூரில் பழியை போட்டுட்டு அரசியல் ஆதாயம் தேடுறாங்க! மேடையில் வெளுத்து வாங்கிய CM Vijay!