
அரியலூரில், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதியதில் அம்பேத்கர் சிலை சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற சரக்கு லாரி நேற்று காலை தா.பழூர் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையின் ஓரமாக இருந்த அம்பேத்கர் சிலை மீது மோதியது. இதில், அம்பேத்கர் சிலையின் அடிப்பாக தூண்கள் பலத்த சேதம் அடைந்தன.
சரக்கு லாரி மோதி அம்பேத்கர் சிலை சேதமடைந்தது என்பதை அறிந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் ஆத்திரத்தில் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மக்களை உடன் இணைத்துக் கொண்டு மதனத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அங்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சிலையை சேதப்படுத்திய லாரி உரிமையாளரிடம் பேசி, சிலையை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட விசிக-வினர், மற்றும் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.