மதுக்கடைகள் மூடல் எதிரொலி... குவாட்டர் ரூ.150... ஆஃப் ரூ.200..!!

 
Published : Apr 08, 2017, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
மதுக்கடைகள் மூடல் எதிரொலி... குவாட்டர் ரூ.150... ஆஃப் ரூ.200..!!

சுருக்கம்

tasmac liquors price hike due to closing

ஆர். கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இத்தேர்தலில் அதிமுக இரண்டு அணியாகவும், திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 62 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்கள் பகுதியில் உள்ள குறைகளை வெற்றி பெற்றால் நிச்சயம் செய்வேன் என்று சத்தியம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் மட்டும் பரிசு பொருட்களை கொடுத்து கவரும் ஒருசில கட்சிகள் மீது தேர்தல் ஆணையத்தில் தினமும் புகார்கள் குவிகின்றன. பணப்பட்டுடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

ஆர் கே நகர் இடைத்தேர்தல் மட்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மார்க் மது பானக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடி மகன்கள் 4 நாட்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

கடைகள் அடைக்கப்படுவதால் 4 நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள ஒரு கூட்டம் முடிவெடுத்துள்ளது. மற்றொரு கூட்டம் விடுமுறையை பயன்படுத்தி லாபம் பார்க்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி நான்கு நாட்களுக்கு விற்பனை செய்வதற்காக மதுபானக்கடைகளில் உள்ள பாட்டில்களை வாங்கி ரகசிய இடத்தில் வைத்து விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துள்ள அவர்கள் குவாட்டர் பாட்டில்களை 150 ருபாய்க்கும், ஆஃப் பாட்டில்கள் 200 ருபாய்க்கும் விற்பணை செய்ய முடிவு செய்துள்ளனர்.   

PREV
click me!

Recommended Stories

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் எத்தனை லட்சம் வாக்காளர்கள்? முழு விவரம் இதோ!
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்