
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டையில் முகாமிட்டிருந்த யானைகள் அனைத்தையும் வனத்துறையினர் விரட்டியடித்து வட்ட வடிவு பாறை வனப் பகுதிக்கு துரத்தியர். இதனால், பயிர்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னர் கட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதியான சவளகிரி காட்டுப் பகுதியில் புகுந்தது.
பின்னர், அவை அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, ஊடேதுர்க்கம் வனப்பகுதி வழியாக ஒசூர், சானமாவு, சூளகிரி ஆகிய பகுதிக்குள் புகுந்தது.
அங்கு, பயிரிடப்பட்டு இருந்த விவசாய பயிர்களான ராகி, சோளம், காய்கறிகளைச் சாப்பிட்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வந்தனர்.
இதனால், இந்த யானைகளை வனத்துறையினர் மீண்டும் பன்னார்கட்ட வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கிட்டத்தட்ட அனைத்து யானைகளும் திரும்பிவிட்ட நிலையில் அவற்றில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தேன்கனிக்கோட்டையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்த யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனச் சரகத்தினர் நேற்று விரட்டியதால் வட்ட வடிவு பாறை அருகே முகாமிட்டி இருந்தன. ஊரை விட்டு யானைகள் விரட்டப்பட்டதால் பயிர்கள் சேதத்தில் இருந்து தப்பித்ததை எண்ணி தேன்கனிக்கோட்டை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.