
கரூர்
கடந்த வருடம் நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து கரூரில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், காமராஜர் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கரூர் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமைத் தாங்கினார். கிளைத் தலைவர் ஜி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் ஜி. பாலசுப்ரமணியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை செயலர் கே. குருசாமி மற்றும் கே. பெரியசாமி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.பாபு, பி.மகேஸ்வரி, எம்.அறிவானந்தம், எஸ். சகாயமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜோதிவேல் நன்றித் தெரிவித்தார்.