திமுக தவிர அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தது

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 10:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
திமுக தவிர அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தது

சுருக்கம்

நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தன

கடந்த மே மாதம் 16ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல் உடல்நிலை பாதிப்பில் இறந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியாக இருந்தது.

தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

தொடர்ச்சியான 2வது ஆட்சியில் நடந்துள்ள இடைத்தேர்தலில் முழுமையாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு 136 ஆக பலம் உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு 89, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒன்று என்ற அளவில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உள்ளது.

தற்போது நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியை விட 23,661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள் 2,00,347, பதிவானவை 1,63,999, வி.செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.) 88,068, கே.சி.பழனிசாமி (தி.மு.க.) 64407, பிரபு (பா.ஜ.க.) 3162, முத்து (தே.மு.தி.க.) 1513, பாஸ்கரன் (பா.ம.க.) 995, சந்திரன் (ஜனதா தளம்) 45, அரவிந்த் (நாம் தமிழர்) 793, கீதா தேசிய (மக்கள் சக்தி) 82, தேக்கமலை (உழைப்பாளி மக்கள்) 76, தமிழ்சேரன் (தமிழ் தேசிய கட்சி) 104, நோட்டா – 1538.

தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தஞ்சை தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைத்துள்ளது.

மொத்த வாக்குகள் 2,68,516, பதிவான வாக்குகள் 1,86,444, ரெங்கசாமி (அ.தி.மு.க.) 1,01,362, அஞ்சுகம்பூபதி (தி.மு.க.) 74,488, ராமலிங்கம் (பா.ஜ.க.) 3,806, அப்துல்லாசேட் (தே.மு.தி.க.) 1,534, நல்லதுரை (நாம்தமிழர் கட்சி) 1,192, குஞ்சிதபாதம் (பா.ம.க.) 794, கரிகால்சோழன் (தேசியவாத காங்.) 105, நோட்டா –2,295.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் 42,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள் 2,85,980, பதிவானவை 2,03,052, ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.) 1,13,032, டாக்டர் பி.சரவணன் (தி.மு.க.) 70,362,

சீனிவாசன் (பா.ஜ.க.) 6,930, தனபாண்டியன் (தே.மு.தி.க.) 4,105, மகாதேவன் (நாம் தமிழர் கட்சி) 1,082, நோட்டா 2214.

PREV
click me!

Recommended Stories

பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! பிப்ரவரி 15ம் தேதி முதல் தரமான சம்பவம்.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்!