
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜ்பவனில், நேற்று ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதித்தாக தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது குறித்து பேசிய ஸ்டாலின் , தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, அரசு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் முடிந்து, இதுவரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா ஆட்சியில், ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகம், மிகவும் சீர்குலைந்து போயிருந்தது. தற்போது, முன்பைவிட, அரசு நிர்வாகம் மிகவும் மோசம் அடைந்துள்ளது என்றும் ஸ்டாலின் ஆளுநரிடம் தெரிவித்தார்.
இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நியாயமான ஆட்சி நடைபெற, ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என,ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
மேலும் அதிமுக எம்எல் ஏக்கள் பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறைபிடிக்கபட்டுள்ள அவர்களை மீட்க வேண்டும் என்றும் வலியிறுத்தினார்.
இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணும் வகையில் சட்டசபையை கூட்டி, வெளிப்படையாக ஓட்டு அளிக்கும் நிலையை ஏற்படுத்த அரசியல்சாசனம் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.