தமிழர்களுக்கு நல்லது செய்வாரா மோடி? திமுக பெண் பிரமுகரின் வீடியோ.. அதை பகிர்ந்து கேள்வி கேட்ட செல்லூர் ராஜு!

By Ansgar R  |  First Published Jun 10, 2024, 8:48 PM IST

Sellur Raju : முன்னாள் தமிழக அமைச்சரும், அதிமுக தலைவருமான செல்லூர் ராஜு இன்று வெளியிட்ட ஒரு பதிவில் மோடி குறித்து ஒரு திமுக பெண் நிர்வாகி பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 272 என்கின்ற பெரும்பான்மையை பாஜக பெறவில்லை என்றாலும், அதன் கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட அவரது அமைச்சரவையில் இருக்கும் அனைத்து தலைவர்களும் பதவி பிரமாணம் ஏற்றனர். 

இந்நிலையில் இன்று ஜூன் 10ஆம் தேதி, சில மணி நேரங்களுக்கு முன்பு மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் வெளியிடப்பட்டுள்ளது. உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை, மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய நான்கு முக்கியமான இலாகாக்களில் எந்தவிதமான மாற்றமும் இப்போது இல்லை. 

Tap to resize

Latest Videos

undefined

Crime: பள்ளி திறந்த முதல் நாள்; ஆர்வமாக சென்ற அரசு ஆசிரியரை வழிமறித்து போட்டு தள்ளிய மர்ம கும்பல்

மேலும் மூத்த அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே வகித்து வந்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், அஜய் தம்த்தா மற்றும் ஹரீஷ் மல்கோத்ரா ஆகிய இருவரும் அவரது இணை அமைச்சர்களாக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கஜேந்திர சிங்கிற்கு, ஜெல் சக்தி துறைக்கு பதிலாக சுற்றுலாத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து அமைச்சர்களுக்கும் அவர்களுக்கான இலாகாக்கள் தற்பொழுது பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோடியின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில், தமிழர்களை தவிர வட மாநிலத்தவர்களுக்குத் தான் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு அரசு வேலைகள் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செல்லூர் ராஜு. 

புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குறல் எழுப்புவார்களா? பார்ப்போம் .!!! pic.twitter.com/YVd1wBoDZk

— Sellur K Raju (@SellurKRajuoffl)

மேலும் "புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குறல் எழுப்புவார்களா? பார்ப்போம்" என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியீடு! மோடி 3.0 ஆட்சியில் யாருக்கு முக்கியத்துவம்?

click me!