பழனிக்கு சென்ற பழனிசாமி...! ஜோசியர் சொன்னதால் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டாரா இபிஎஸ்..?

By Ajmal Khan  |  First Published Aug 8, 2022, 11:03 AM IST

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
 


ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்,இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஆதரவாளர்களோடு ஓபிஎஸ் சென்றதாலும், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அடிமட்ட தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதே போல அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மகிழ்ச்சியாக இல்லாமல் தொடர் போராட்டமாகவே அமைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

பழனிக்கு சென்றால் வெற்றி

இதனையடுத்து ஜோசியம் மீது அதிக நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி தான் எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும் நல்ல நேரம், காலம் பார்த்து தான் ஈடுபடுவார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வீட்டில் இருந்து புறப்பட்ட போதும் வீட்டில் சிறப்பு பூஜை மேற்கொண்டிருந்தார். ஏற்கனவே திருப்பதி கோயிலுக்கு சென்ற இபிஎஸ் சிறப்பு வழிப்பாட்டிலும் கலந்து கொண்டார். இதனையடுத்து  தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்காகவும்,  தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக வருவதற்காகவும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவருமாறு இபிஎஸ்யின் ஆஸ்தான ஜோசியர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தான் உலக பிரசித்து பெற்ற பழனி முருகன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று காலை 7.15 மணியளவில் பழனி மலைக்கோவிலுக்கு வந்த இபிஎஸ் மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி பூஜையில் கலந்து கொண்டார். மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின்பு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்து வழிபட்டார். 

எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் ரகசிய கூட்டு...! இபிஎஸ் அணியினரை அலற விடும் அதிமுக முன்னாள் எம்.பி

சிறப்பு பூஜையில் இபிஎஸ்

முன்னதாக நேற்று பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இபிஎஸ் பேசுகையில், 14 அமாவாசைகள் சென்று விட்டன. இன்னும் 46 அமாவாசைகள் முடியும் முன்பு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என தெரிவித்தார். மேலும் மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் சொத்து வரி, மின் கட்டண உணர்வு போன்ற வரிச்சுமையை தி.மு.க. அரசு அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். எனவே இந்த தி.மு.க. அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் வீழ்த்துவோம்... எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

 

click me!