எந்த தாய்க்கு இதுபோல நடக்கக்கூடாது.. கடவுளே.. தாய் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பிள்ளைகள்

Published : Aug 08, 2022, 10:14 AM ISTUpdated : Aug 08, 2022, 10:16 AM IST
எந்த தாய்க்கு இதுபோல நடக்கக்கூடாது.. கடவுளே.. தாய் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பிள்ளைகள்

சுருக்கம்

ஸ்கூட்டி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்கூட்டி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநீளம் கிராமத்தை சேர்ந்தவர் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி தேன்மோழி (35). இவர்களுக்கு மகன்கள் சித்தார்த் (4), லோகேஷ் (3) என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில், டியூசன் சென்டரில் இருந்து தனது குழந்தைகளை ஸ்கூட்டியில் அழைத்துகொண்டு தேன்மொழி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- AC வெடித்ததில் படுக்கையிலேயே உயிரிழந்த இளைஞர்! என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே!நெஞ்சில் அடித்து கதறிய மனைவி

அப்போது, அவ்வழியாக சென்ற டிராக்டரை முந்தி  செல்ல தேன்மொழி முற்பட்ட போது வலது புறமாக திரும்பிய போது திடீரென எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் இவர்களது ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மொபட்டில் வந்த தேன்மொழி, லோகேஷ்குமார், சித்தார்த் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது டிராக்டரில் இணைக்கப்பட்ட டிரெய்லரின் பின்புற சக்கரத்தில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். 

இதையும் படிங்க;- சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? நீதிமன்றத்தில் ஹேம்நாத் அதிர்ச்சி தகவல்.!

இதில், சிறுவன் சித்தார்த், தனது தாய் கண் எதிரேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த லோகேஷ்குமார் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த தேன்மொழி, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி இருவரும் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live today 10 December 2025: இவர்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை.. எல்லாமே இலவசம்.. முழு லிஸ்ட் உள்ளே