ஒற்றுமை ஓங்கட்டும், வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும்- ஓபிஎஸ் அறிக்கை

Published : Aug 30, 2022, 10:24 AM IST
ஒற்றுமை ஓங்கட்டும், வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும்- ஓபிஎஸ் அறிக்கை

சுருக்கம்

விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

விநாயகர் சதூர்த்தி தின வாழ்த்து

விநாயகர் சதூர்த்தியையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடடிணம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடலும், மன மகிழ்வுடனும் கொண்டாடி பகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துகளை முதற்கண் தெரியிந்துக் கொள்கிறேன். சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்; 

அதிமுக அலுவலகம் இபிஎஸ் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டிலே நான் திருடுவேனா? திருப்பி அடிக்க ஆரம்பித்த ஓபிஎஸ்.!

ஒற்றுமை ஓங்கட்டும்

அதன்மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும். இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரந்தைம் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேந்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது "விநாயகர் சதுர்த்தி” திருநாள் நல்வாழ்ந்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகப்பு இல்லை... !தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது- இபிஎஸ் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜெயலலிதாவின் வலது கரம் டிடிவி.. தினகரனை வானளாவப் புகழ்ந்த அண்ணாமலை
கொஞ்சம் கூட நன்றி இல்லையா ஸ்டாலின்! அரசு ஊழியர்களுக்கு இப்படி செய்யலாமா? சொல்வது யார் தெரியுமா?