2 ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்புகள்.. நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்- வேளாண் பட்ஜெட்

By Ajmal Khan  |  First Published Feb 20, 2024, 10:35 AM IST

மண்வளம் பேணி காக்கவும் மக்கள் நான் காக்கவும் உயிர்ம மேலாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல் முயற்சிகளையும் ஊக்குப்படுத்திட  206 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழக நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று  வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன் படி, 

  • 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  •  நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன
  • இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணமாக 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
  •  பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ஒதுக்கீடு இதன் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்

  • மண்வளம் பேணி காக்கவும் மக்கள் நான் காக்கவும் உயிர்ம மேலாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல் முயற்சிகளையும் ஊக்கப்படுத்திட 206 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  •  முதலமைச்சரின் மன்னுயிர் காற்று மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்க ஊக்குவிக்கும் வகையில் பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரம் படுக்கைகள் வழங்கிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கரானது செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

  • களர் அமில நிலங்களை சீர்படுத்த 22.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் படி ஒவ்வொரு சிற்றூரும் தண்ணீரை பெற்றிடும் வகையில் 2482 கிராம ஊராட்சிகளில் 200 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • வேளாண் காடுகள் திட்ட மூலம் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பத்து லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • ஆடாதொடை நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு
click me!