சசிகலாவிற்கு பரோல் கிடையாது.... மறுத்தது சிறை நிர்வாகம்..!

 
Published : Mar 19, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
சசிகலாவிற்கு பரோல் கிடையாது.... மறுத்தது சிறை நிர்வாகம்..!

சுருக்கம்

agrahara jail dept not allowed sasikala to come out by barol

சசிகலாவிற்கு பரோல் கிடையாது.... மறுத்தது சிறை நிர்வாகம்..!

சொத்து குவிப்பு வழக்கில்,பெங்களூரு அக்ரஹாரா சிறையில் தண்டனை  அனுபவித்து வரும் சசிகலாவிற்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது

இதனை தொடர்ந்து பரோல் கேட்டு சசிகலா மனு கொடுத்திருந்தார்.  இந்நிலையில் நடராஜன் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறியதால்,சசிகலாவிற்கு பரோல் மறுக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில்,சில மாதங்களுக்கு முன்பு தான் சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டதால்,நெருங்கிய உறவுகள் உயிரிழப்பு நேரிட்டால் மட்டுமே பரோல் வழங்க முடியும் என சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!