மீண்டும் தொடங்கிய மழை..! மேலும் பாதிப்படையும் 5 மாவட்டங்கள்..! எச்சரிக்கை விடுத்த வானிலை...!

By thenmozhi gFirst Published Aug 16, 2018, 2:13 PM IST
Highlights

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளது. 

தொடர்ந்து கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள 5 மாவட்டத்தில், அடுத்து 24 மணி நேரத்துக்கு மழை தொடர்ந்து நீடிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி, கபினியில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு.ஒட்டு மொத்தமாக 1.90 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு.2003 ஆம் ஆண்டு 1.84 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் மேலும் மூன்று நாட்களுக்கு தொடர் மழை காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நிலசரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர். இந்திய முழுவதும் உள்ள  உதவும் கரங்கள்  கேரள மக்களுக்காக உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

click me!