
உருவானது மேலும் ஒரு “மேலடுக்கு சுழற்சி”
இலங்கையை யொட்டி தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருந்த மேலடுக்கு சுழற்சி தற்போது வலிவிழந்து உள்ளது என்றும், அதே வேளையில்தென்கிழக்கு அரபி கடல், தெற்கு கேரளா பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதாகவும் இது அடுத்த 48 மணி நேரத்தில் வலிவடைந்து கிழக்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்
அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள இந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று வருவதால், ஈரப்பதமுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் மேலும் மழை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தலைஞாயிரில் 8 செமீ மழையும் பெய்துள்ளது.மீண்டும் புதியதாக உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் பொறுத்த வரையில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது