விசில் அடிக்கும் புதிய செயலி "#KH" ..! விசில் அடித்தால் " தீயவை" நின்றுவிடும்.. கமல் அதிரடி..!

 
Published : Nov 07, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
விசில் அடிக்கும் புதிய செயலி "#KH" ..! விசில் அடித்தால் " தீயவை" நின்றுவிடும்.. கமல் அதிரடி..!

சுருக்கம்

new app introduced by kamal KH

#KH 

தீயவை நடக்கும் போது இந்த செயலி மூலம் குரல் கொடுக்க வேண்டும் என அரசியலில் குதிக்க அயத்தமாகி வரும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

நடிகர் கமலின் பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் உள்ள GRT  ஹோட்டலில் தன் ரசிகர்களுடன் உரை நிகழ்த்தினார்.அவருடைய  பிறந்த நாள்  சிறப்பாக,  மக்கள் நலன் கருதி, புதிய செயலியை அறிமுகம் செய்து உள்ளார்.

இந்த ஆப் மூலம் என்ன செய்ய முடியும் தெரியுமா? 

#KH  என பெயரிடப்பட்டு உள்ள, இந்த  செயலி  மூலம், யாருக்கெல்லாம் உதவி தேவை படுகிறதோ அவர்களை  தேடி  தேடி  நல்லதை செய்வது தான்  தன்னுடைய  நோக்கம் என கமல் தெரிவித்துள்ளார் .

அதில் குறிப்பாக  #maiamwhistle  என்ற இணைப்பும் இந்த செயலியில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

தீயவை நடக்கும் போது , இந்த செயலி  ஒரு கருவியாக செயல்படும் என்றும்
அதாவது  தீயவை நடக்கிறது என்று தெரிந்தால்,உடனே விசில் அடியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் அடிக்கும் இந்த விசில் மூலமாகத்தான், நல்லது நடத்த முடியும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார் 

விசில் அடித்தால் என்ன நடக்கும்?

விசில் அடித்தால் பேருந்து கூட நின்று விடும் அல்லவா. அதே போன்றுதான் இந்த விசிலை அடிக்கும்போது தீயவை நடப்பதை உடனே நிறுத்தி விட்டு  நல்லதை செய்யலாம் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளார் கமல்.
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு