கள்ளக் காதலன் இறந்ததால் இந்தப்  பெண் செய்த செயலைப் பாருங்கள்….

 
Published : May 02, 2018, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
கள்ளக் காதலன் இறந்ததால் இந்தப்  பெண் செய்த செயலைப் பாருங்கள்….

சுருக்கம்

after Lover death a lady sucide with her daughter

புதுச்சேரி அருகே  கள்ளக்காதலன் விபத்தில் இறந்ததால் மனமுடைந்த பெண் ஒருவர், தனது குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி  மாநிலம் வைத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர்  29 வயதான சுசித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள, ஹோட்டலில்  ரிஸப்சனிஸ்ட்டாக பணியாற்றி வந்தார்.

கணவரைப் பிரிந்து தனது  6 வயது மகள் நிவேதாவுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் நிவேதாவுக்கும் ,  பிரபாகரன் என்ற கார் டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த கார் விபத்தில் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், மனமுடைந்த  சுசித்ரா, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். தான் உயிரிழந்துவிட்டால், தனது மகளை பார்த்துக்கொள்ள யாரும் இருக்க மாட்டர்கள் என கருதிய சுசித்ரா, நிவேதாவையும் கொல்ல திட்டமிட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்  இரவு தனது மகளுக்கு குளுகோஸில் மயக்க மாத்திரை கலந்துக் கொடுத்துவிட்டு, தானும் அதை குடித்துவிட்டு, பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலை நீண்ட நேரமாக சுசித்ரா வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தகனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பிணங்களைப் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!