தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், புதிய தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளும், தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும், ஆங்காங்கே திடீரென கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து பின்னர் கட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளது.
undefined
அந்த வகையில், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று நோய்க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கான கண்காணிப்பை அமைக்கவும், தயார்நிலையை உறுதிப்படுத்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 20ஆக உள்ளது. நேற்று 391 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நேர்மறை விகிதம் 6.2 சதவீதமாக உள்ளது. தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உள்ளது. கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் 10க்கும் குறைவாக இருந்த இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த திமுக நோட்டீஸ்!
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அடிக்கடி கைகளை கழுவவும், மாஸ்க் அணியவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.