சிறுமி பலாத்கார வழக்கு..! 17 பேரை நீதிமன்றத்திலேயே சரமாரியாக போட்டு தாக்கிய வக்கீல்கள்..!

 
Published : Jul 17, 2018, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
சிறுமி பலாத்கார வழக்கு..! 17 பேரை நீதிமன்றத்திலேயே சரமாரியாக போட்டு தாக்கிய வக்கீல்கள்..!

சுருக்கம்

advocate attacked 17 culprit outside of the court today

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் செவித்திறன் பாதித்த 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் விளையாட்டு என்ற பெயரில் கடந்த 7 மாதங்களாக மயக்க ஊசி மற்றும் போதை மாத்திரை கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 18 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில்,பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.அந்த போலீசார் புகாரை கண்டதும் அதிர்ச்சியடைந்தர்.

அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த சிறுமியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியைபாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நேற்று சிறையில் அடைத்தனர்.பின்னர் இவர்களை இன்று நீதி மன்ற வளாகத்திற்குள் அழைத்து வந்த போது,  வழக்கறிஞர்கள் அவர்களுக்கு சரமாரியாக அடி உதை கொடுத்து உள்ளனர்

இந்த 17  பேரும் அமர்ந்து  இருந்த போலிஸ் வேனை  சூழ்ந்துக்கொண்ட வக்கீல்கள்  அவர்களுக்கு அடி உதை கொடுத்து உள்ளனர்.சாதாரண சிறுமியை இப்படி செய்து உள்ளனரே என்று, கொதித்து எழுந்த வக்கீல்கள் அவர்களுக்கு அடி கொடுத்து வெளுத்தி வாங்கி உள்ளனர்

இந்த 17 போரையும் வரும் 31 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு  நிலவியது.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் தரப்பை ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிய அன்புமணி.. கொடியை கூட தொடக் கூடாதாம்..!
அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி