ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்.. முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாசன் பரபரப்பு ஸ்பீச் - வீடியோ உள்ளே!

By Ansgar R  |  First Published Jul 20, 2023, 7:59 PM IST

அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாசன் அவர்கள் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று தவறுதலாக பேசிய காணொளி தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரித்து வருவதை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் அறிவித்திருந்தார். 

இதனை எடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். 

Tap to resize

Latest Videos

அப்பொழுது பேசிய முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் மீண்டும் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அப்படி நடத்தினால் அவருக்கு டெபாசிட் காலியாகும் என்றும் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று ஸ்டாலினை வசை பாடி கொண்டிருந்த அதே நேரத்தில் "மீண்டும் தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என்று கூறி பேசினார். 

100 கோடி சொத்து பத்திர பதிவு ரத்து செய்யப்பட்டதில் நடந்தது என்ன.? - நயினார் பாலாஜி விளக்கம்

உடனே அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அவரிடம் அவர் பேசியதை கூறியதும், அய்யோ தெரியாமல் வந்திருக்கும் என்று கூறி மீண்டும் பேசத் தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா அங்கு முகாமிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அவர் கூறினார். 

இதனை ஒரு சில ஊடகங்கள் ஒளிபரப்பு செய்து வருகின்றன, ஆனால் அதேநேரம் பல ஊடகங்கள் மணிப்பூரில் பெரிய அளவில் கலவரம் நடப்பது போல் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக கூறினார் ஸ்ரீனிவாசன். 

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் - ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு அவசர கடிதம்!

click me!