
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். நீதிபதிகள் சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சக்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்செல்வி ஆகியோர், நீதிமன்றத்தின் கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றனர். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். நிரந்தர நீதிபதிகள் 9 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.
மேலும் படிக்க: மண் சரிவில் சிக்கிய தொழிலாளி.. பொக்லைன் கொண்டு மீட்கும் போது தலை துண்டாகி உயிரிழப்பு.. 3 பேர் கைது