
ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் ஆளாளுக்கு அதிகாரம் செய்வது ஒரு பக்கமென்றால், ஜெ.,வின் பர்ஷனல் விஷயங்களைப் பற்றியும் கூட பரபரப்பாக பேசத்துவங்கிவிட்டனர் சிலர். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் அக்குபஞ்சர் டாக்டர் எம்.என். சங்கர்.
ஜெயலலிதாவுக்கு கை,கால்களில் அதிக வலி இருந்தபோது அதை குணப்படுத்துவதற்காக அக்குபஞ்சர் வைத்தியம் தந்தவர் இந்த சங்கர். ஓரளவு இதில் நிம்மதி கிடைத்ததால் சந்தோஷித்திருக்கிறார் ஜெ. இதன் பின் அவர் அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்ட போதும் சங்கர் சென்று அவரை சந்திக்க முயன்றாராம் ஆனால் அனுமதி கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் விசாரணை கமிஷன் முன் ஆஜராகிவிட்டு வந்திருக்கும் சங்கர், ஜெ.,வின் பர்ஷனல் விஷயங்கள் குறித்து சில தகவல்களை பகிர துவங்கியிருக்கிறார். அதில் அம்ருதா குறித்து சொல்லியிருப்பவைதான் ஹைலைட் தகவல்கள்.
“அம்ருதா ஜெயலலிதாவின் மகள்தான். அம்ருதாவின் கை அமைப்பும் அப்படியே ஜெ.,வின் கை அமைப்பு போலவே இருக்கிறது. தாயுக்கும், பொண்ணுக்கும் ஒரே மாதிரி இருக்கும். அம்ருதாதான் ஜெயலலிதாவின் வாரிசு, இதை நான் உறுதியா சொல்றேன்.
அவங்களுக்கு இருக்கிற அதே நோய் இவங்களுக்கும் இருக்குதே. ஒரு டாக்டராக இதை சொல்றேன்.
இத்தோடு விட்டாரா சங்கர்...
“வலி நிவாரணியாக ஜெயலலிதாவுக்கு ஸ்டிராய்டு மருந்துகளை பல காலமாக கொடுத்திருக்காங்க. ரொம்ப வருஷம் நடந்திருக்குது. ஜெயலலிதா கடைசியில மிக ஆபத்தான நிலையில மருத்துவமனைக்கு போனதே இந்த ஸ்டிராய்டோட எஃபெக்டுன்னுதான் நான் நினைக்கிறேன்.” என்றும் உடைத்திருக்கிறார்.
ஹும்! அந்தம்மாவை வெச்சு இன்னும் யார் யார் என்னென்ன பகீரையெல்லாம் பற்ற வைப்பாய்ங்களோ!