“ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கேட்கிறேன்” - நடிகை சமந்தா ஆதரவு

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
“ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கேட்கிறேன்” - நடிகை சமந்தா ஆதரவு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் நடக்கும் இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் டி.ராஜேந்தர் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து கூறி, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, நடிகர்கள் மன்சூர் அலிகான்,ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தமிழ் நடிகைகள் சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பலர் தங்களது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கு நான் ஆதரவளிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் ஆதரவும், நியாயமும் கேட்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு, ஆர்ஜே பாலாஜி பதில் அளித்த வீடியோ, நடிகர் விஜய் வெளியட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வீடியோக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு ‍ - இபிஎஸ்
திமுக, அதிமுக-வுக்கு செக் வைத்த TVK! மதுரையில் CTR நிர்மல் குமார் அதிரடி பேட்டி !