முக்கூடல் பகுதியில் அற்றில் குளித்தபெண்களை நடிகர் ராஜேந்திர நாத் வீடியோ எடுத்ததாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களை வீடியோ எடுத்த நடிகர்?
தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் ராஜேந்திரநாத் இவர் நெல்லை மாவட்டம் முக்கூடலில் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார், அப்போது அங்கு வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதி இளைஞர்களிடம் அனுமதி பெற்று இந்த பணியை மேற்கொள்கிறீர்களா, எனக்கூறி தனது செல்போனில் கோவிலை சுற்றி வீடியோ எடுத்தவாறே சென்றார். அப்போது குளத்தில் பெண்கள் குளித்ததையும் நடிகர் ராஜேந்திரநாத் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் ராஜேந்திரநாத் முக்கூடல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, தன்னை முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக முக்கூடல் போலீசில் புகார் அளித்துவிட்டு, நெல்லை நோக்கி கிளம்பினார்.
undefined
இரு தரப்பும் போலீசில் புகார்
இதற்கிடையில் பெண்கள் ஆற்றில் குளிப்பதை நடிகர் ராஜேந்திரநாத் வீடியோ எடுத்தாக அந்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முக்கூடல் பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களை நடிகர் ராஜேந்திர நாத் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இருதரப்பு புகார் மனுக்களையும் பெற்று கொண்ட முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே நெல்லை நோக்கி சென்ற நடிகர் ராஜேந்திர நாத் காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,