அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி!

By Manikanda Prabu  |  First Published Feb 4, 2024, 1:38 PM IST

அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்


நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

 

pic.twitter.com/fnjtAmw31r

— TVK Vijay (@tvkvijayoffl)

 

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும்  தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் மட்டுமே பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கும் - எஸ்.வி.சேகர்!

இந்திய தேர்தல் ஆணையத்தில்தனது கட்சியை  பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

click me!