தமிழ் திரையுலகில் கந்துவட்டி என்பதே கிடையாது  - பைனான்சியருக்கு ஆதரவாக திரண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...!

 
Published : Nov 24, 2017, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தமிழ் திரையுலகில் கந்துவட்டி என்பதே கிடையாது  - பைனான்சியருக்கு ஆதரவாக திரண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...!

சுருக்கம்

actor actress and producers support for anbuchezhiyan

பைனான்சியர் அன்புச்செழியன்  கந்துவட்டி பணம் கேட்டு துண்புறுத்துபவர் என்பது மிகவும் தவறு எனவும் படம் வியாபாரம் ஆகிவிடும் என தெரிந்தாலே அன்புச்செழியன் பணத்தை தருபவர் எனவும் திரையுலகில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

நடிகர் சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் அவர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதும், மிரட்டல் காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திரையுலகினர் பலரும் அசோக்குமாருக்கு ஆதரவாகவும், கந்து வட்டி அன்புச் செழியனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதில், கந்துவட்டியில் சிக்கியவர்கள் லிஸ்டில், நடிகர் விஷால், லிங்குசாமி, பார்த்திபன் ஆகியோரும் இருப்பதாக விஷால் பேட்டியளித்தார். 

மேலும் அன்புச்செழியனிடம் கந்துவட்டி கொடுமையில் சிக்கி தவித்தவர்கள் லிஸ்டில் நடிகை தேவையானி, ரம்பா ஆகியோரும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியது. 

இதுகுரித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவிக்கையில், 6 வருடமாக அன்புச்செழியனிடம் பணம் பெற்றுத்தான் படம் எடுத்து வருகிறேன். என்னிடம் அவர் முறையாகத்தான் நடந்துகொள்கிறார். அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது என தெரிவித்தார். 

அதேபோல் சீனு ராமசாமியும் அன்பு செழியனுக்கு ஆதரவாக பேசினார். இதேபோல் தற்போது, தேவையானியும் அன்புசெழியனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

பைனான்சியர் அன்புச்செழியன் தன்னை கந்துவட்டி பணம் கேட்டு துண்புறுத்தினார் என வெளிவந்த செய்தியில் துளியும் உண்மையில்லை எனவும் வியாபாரம் ஆகிவிடும் என தெரிந்தாலே அன்புச்செழியன் பணத்தை தருபவர் எனவும் நடிகை தேவையானி தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் மனோபாலா, அன்புசெழியன் அன்பானவர் என்றும் சசிகுமார் கஷ்டத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!