கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை... நடவடிக்கை உறுதி... மா.சுப்ரமணியன் அதிரடி!!

By Narendran SFirst Published Nov 11, 2022, 8:56 PM IST
Highlights

கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். 

கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். முன்னதாக சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா என்பவர் மூட்டு வலி காரணமாக கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் காலில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு, உணா்விழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரியாவை பரிசோதித்த போது, அவரது வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரி… தொல்.திருமாவளவன் பரபரப்பு கருத்து!!

இதை அடுத்து அவரது வலது கால் தொடை பகுதி வரை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் கால் அகற்றப்பட்டதாக கூறி பிரியாவின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்!!

மேல் சிகிச்சைக்காகதான் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானதல்ல. மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள். இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை ஒதுக்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  

click me!