சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் இன்று நடக்க இருந்த ஐந்து திருமணங்கள் மழை காரணமாக தாமதம் ஆனதோடு கோயிலில் தேங்கிய மழை நீரால் தம்பதிகள் முழுவதும் நனைந்தனர்.
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் இன்று நடக்க இருந்த ஐந்து திருமணங்கள் மழை காரணமாக தாமதம் ஆனதோடு கோயிலில் தேங்கிய மழை நீரால் தம்பதிகள் முழுவதும் நனைந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ
சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள பல முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் இன்று 5 திருமணங்கள் நடைபெற இருந்தது. இந்த திருமணங்கள் சில மாதங்களுக்கு முன்பே நடைபெறுவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளிபோகி இன்று நடக்க இருந்தது. ஆனால் காலை முதல் பெய்த கனமழை காரணமாக 5 திருமணங்களும் தாமதமாகின.
undefined
இதையும் படிங்க: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்!!
திருமணத்திற்காக வரிசையில் காத்திருந்த தம்பதிகள் கோயிலுக்குள் தேங்கியிருந்த தண்ணீர் வழியாக நடந்து சென்றபோது முழுவதும் நனைந்தனர். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட மணமகன் ஒருவர், கோவில் வளாகத்தில் உள்ள நீரை அகற்ற உதவுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 64.5 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.